search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி சிறைபிடிப்பு"

    காலாப்பட்டில் செயல்படும் தனியார் தொழிற்சாலைக்கு அனுமதியின்றி தண்ணீர் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேதராப்பட்டு:

    காலாப்பட்டில் செயல்படும் தனியார் தொழிற்சாலைகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நிலத்தடி நீரை எடுப்பதாகவும், இங்கிருந்து வெளியிடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவதாகவும் கவர்னருக்கு புகார் வந்தது.

    எனவே, கவர்னர் கிரண்பேடி அந்த தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டது.

    இதனால், தொழிற்சாலை தேவைக்காக வெளியில் இருந்து டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வருகின்றனர். இதற்கு உரிய அனுமதி பெறவில்லை.

    இந்த நிலையில் இன்று வெளியிடத்தில் இருந்து டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. பிள்ளைச்சாவடியில் லாரி வந்த போது பொதுமக்கள் அந்த லாரியை மறித்து சிறை பிடித்தனர்.

    எங்களுக்கே போதிய குடிநீர் இல்லை. தொழிற்சாலைகளுக்கு எப்படி தண்ணீர் கொண்டு செல்லலாம்? எனக்கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் இதுபற்றி காலாப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். குடிநீர் கொண்டு வர எந்த அனுமதியும் அவர்களிடம் இல்லை.

    எனவே, லாரி உரிமையாளர் சந்திரசேகர் மீது வழக்குபதிவு செய்தார். மேலும் லாரியை பறிமுதல் செய்து காராமணிக்குப்பம் நிலத்தடி நீர் ஆதாரமையத்துக்கு அனுப்பி வைத்தார்.

    ×